business

img

அடிவாங்கிய இந்திய பங்குச் சந்தைகள்.... 586 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் குறியீடு...

புதுதில்லி:
நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்களன்று, இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையான ‘சென் செக்ஸ்’ 586.66 புள்ளிகளும், தேசியப்பங்குச் சந்தையான ‘நிப்டி’ 171 புள்ளிகளும் சரிந்தன.

முன்னதாக, சென்செக்ஸ் மற்றும்நிப்டி குறியீட்டில் உள்ள பெரும் பாலான குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்பட்டன. அதன் நிறைவாக, வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தை 52 ஆயிரத்து 553.40 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தை 15 ஆயிரத்து 752.40 புள்ளிகளும் நிலைபெற்றன.பிபிசிஎல், ரிலையன்ஸ், நெஸ்லே,ஐஓசி, என்.டி.பி.சி, டிவிஸ் லேப், ஐஓசி,டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், அதேவேளையில் எச்.டி.எப்.சி வங்கி, ஹெச்.டி.எப்.சி, பஜாஜ் ஆட்டோ, இந்தஸிந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் இருந்தன.

;